விஜயின் குரலில் வெறித்தனமாக வெளியான கோட் படத்தின் பாடல்!

 மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது!


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் வெங்கட் பிரபு, இவர் தற்போது தளபதி விஜய் வைத்து முதல் முறையாக கோட் என்கிற படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகியோர் நடிக்கிறார்கள் மேலும் லைலா சினேகா உள்ளிட்டவர்களும் நடித்து வருகிறார்கள். 

படமும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்ததால் அப்டேட் எப்ப வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். இதற்கிடையே தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோட் படத்திலிருந்து முதல் பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள் இப்பாடல் தற்போது இணையதளங்களில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

யுவன் சங்கர் ராஜாவின் அசத்தலான இசையில் மதன் கார்க்கியின் வரிகளில் தளபதி விஜயின் வெறித்தனமான குரலில் வெளியாகி இருக்கும் இந்த பாடல் இளசுகள் கொண்டாடும் பாடலாக அமைந்திருக்கிறது. விசில் போடு என்று தொடங்கும் இந்த பாடலில் பல்வேறு அரசியல் வசனங்களும் இடம் பெற்று இருக்கிறது. சமீப காலமாக தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய், அவர் பாடும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்கும் அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் கோட் படத்தின் முதல் பாடலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வெற்றி பாடலாக மாறி உள்ளது. 

கோட் படத்திற்கு பிறகு தன்னுடைய 69 ஆவது பாடத்தோடு சினிமாவுக்கு முழுக்க போட உள்ளார் விஜய், அதன் பிறகு முழுநேர அரசியல் ஈடுபட்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகமெங்கும் தனித்துப் போட்டியிட அவர் முடிவு செய்திருப்பதும் நம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்