ஆனைமங்கலம் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து அடிப்படை வசதி கேட்கும் வைரல் மாணவியின் பெற்ற!

 மின் வசதி கேட்டு மாணவி வேண்டுகோள் என்ன செய்யப் போகிறது அரசு நிர்வாகம்?


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட ஆனைமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மாணவி ஒருவர் மின் வசதி இல்லாமல் தெருவிளக்குகள் உதவியுடன் படித்து வருவதாக இணையதளங்களில் வீடியோவும் செய்திகளும் வெளியானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக செயற்பாட்டாளர்கள் முழுமையாக அந்த மாணவிக்கு மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 


இதற்கிடையே அடிப்படை வசதி வேண்டி இணையத்தில் வீடியோ வெளியிட்ட மாணவியின் குடும்பத்தார் ஆனைமங்கலம் கிராமத்தில் மிகப்பெரிய நீர் நிலையான துலாம் மரத்து ஏரியின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த மாணவியின் குடும்பம் மட்டுமல்லாமல் இன்னும் பல பேர் அங்கு ஆக்கிரமிப்பு செய்தும் வீடு கட்டியும் ஏரியினுள் விவசாயம் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.


இதனால்தான் அவர்கள் எத்தனை முறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்த போதும் அவர்களால் அடிப்படை வசதி செய்து தர முடியவில்லை காரணம் அது ஏரி நிலம் ஆகும். பட்டா இல்லாத இடங்களுக்கு மின்சாரத்துறையில் வழங்குவது இல்லை. இதனிடையே அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமா இல்லை அந்த மாணவிக்கு மின்சார வசதி செய்து தருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்