மலைவாச ஸ்தலமான ஜவ்வாது மலையில் கலை கட்டிய இந்த ஆண்டிற்கான கோடை விழா!
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது ஜவ்வாது மலை. இங்கு பீமன் நீர்வீழ்ச்சி, படகு குழாம் , பூங்காக்கள், கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. மேலும் இந்த ஜவ்வாது மலையில் தேன் மற்றும் பலாப்பழங்கள் பிரசித்தி பெற்றவையாக இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் ஜவ்வாது மலை என்பது மூலிகை காற்று வீசும் இடமாக உள்ளது.
இதற்கு இடையே தமிழக அரசு சார்பாக ஜவ்வாது மலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அ ந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா 28ஆம் தேதி துவங்கியது. 25 ஆவது ஜவ்வாது மலை கோடை விழாவினை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏவ வேலு துவங்கி வைத்தார். இந்தக் கோடை விழாவில் டால்பின் மீன் வடிவில் வடிவமைக்கப்பட்ட ரோஜா மலர் கண்காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.
அதேபோல் பல்வேறு அரசு துறை சார்பாக அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு காட்சி படுத்தப்பட்டது. மேலும் கலைநகழ்ச்சி, தெருக்கூத்து நாடகமும் நடைபெற்றது. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது ஜவ்வாது மலை கோடை விழாவினை கண்டுகளித்த மக்கள் வீட்டுக்கு செல்லும்பொழுது மா, பலா தேன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்று மகிழ்ந்தனர். விழா நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்த கோடை விழா கண்காட்சியினை ரசித்து சென்
றனர்.

0 கருத்துகள்