மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக செங்கம் பகுதியில் மின்தடை அறிவிப்பு!

 

ஒவ்வொரு மாதமும் மின் வழித்தடங்களில் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்யும் விதமாக மாதம் ஒரு நாள் மின்னிருத்தம் செய்யப்பட்டு பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்த டிசம்பர் மாதத்திற்கான மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி டிசம்பர் 16 ஆம் தேதி செங்கம், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகர், தளவநாயக்கன்பேட்டை,  திருவள்ளுவர்நகர், அந்தனூர், மேல்சங்கம், வலையாம்பட்டு, தீத்தாண்டபட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், மேல்பள்ளிப்பட்டு, அரசங்கண்ணி, நீப்பத்துறை, மேல்வணக்கம்பாடி, ஆண்டிப்பட்டி, கரிமலைப்பாடி, பரமனந்தல், குப்பநத்தம், கிளையூர், மேல்பட்டு, மற்றும் மண்மலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்