கலைஞர் மகளிர் உரிமைத் தொகை புதிய அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு!

 திமுக தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின் அறிவித்த கலைஞர் உரிமைத்தொகை குறித்தான புதிய தகவல் வெளியாகியுள்ளது.


திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி மகளிருக்கான கலைஞர் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் தற்போது படிப்படியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கப்பட்ட குடும்பத் தலைவருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டத்தில் தற்பொழுது 1 கோடியே ஆறு லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர். 

மேலும் விடுபட்டிருந்த ஒரு லட்சத்து 35 ஆயிரம் பெண்களுக்கு கடந்த 10 ஆம் தேதி முதல் இரண்டாவது தவணையாக மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.  இது தவிர கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் மேல் முறையீடு செய்ய அக்டோபர் 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.  அதிலும் விண்ணப்பிக்காத குடும்பத் தலைவிகள் பயன்பெறும் விதமாக வரும் ஜனவரியில் மீண்டும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக அமைச்ச தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார். தகுதி வாய்ந்த எந்த குடும்பத் தலைவியும் விடுபட்டு விடக்கூடாது என்று முதல்வர் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார் இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்