அடுத்த ஆண்டிற்கான குரூப் தேர்வு உத்தேச அட்டவணையை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

 அடுத்த ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு திட்ட அட்டவணை வெளியாகி உள்ளது


டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் வரவிருக்கும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையமானது ஆண்டுதோறும் ஆண்டுத் திட்டத்தை வெளியிடுகிறது.

அதன்படி வரவிருக்கும் ஆண்டில் நடைபெறவுள்ள பல்வேறு துறை சார்ந்த தேர்வு குறித்தும் குரூப்- 1,2,4 ஆகிய போட்டித் தேர்வுகள் உத்தேசமாக எந்த மாதத்தில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவரும், தோராயமான காலி இடங்கள், தேர்வுகள் நடைபெறும் நாள் உள்ளிட்ட பல விவரங்கள் இந்த அறிவிப்பில் இடம் பெறும் 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேர்வு பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் முதன்முறையாக வன பாதுகாவலருக்கான தேர்வை நடத்துகிறது என்பதும் நம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்