செங்கம் அருகில் நடைபெற்ற கலைஞர் தமிழ் மன்ற தமிழ் கூடல் நிகழ்வு.!

காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்வு. 

செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் சார்பாக தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வினோத் தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முதுகலை தமிழ் ஆசிரியர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆசிரியர் தேன்மொழி அனைவரையும் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக செங்கம் ஆசிரியர் கவிஞர் சு. தமிழ்மதி என்கிற மணிவண்ணன் கலந்துகொண்டு தமிழின் தொன்மை பெருமை ஆகியவற்றைப் பற்றி பேசினார்.

 நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அமலா தேவி சீனிவாசன் சக்தி சிவமணி ஆணி மேரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.






கருத்துரையிடுக

0 கருத்துகள்