திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் தங்கத்தேர் திருவிழா நடைபெற இருப்பதால் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தேவஸ்தான நிர்வாகம்
புகழ் பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குவது திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஆகும். இது பிரசித்தி பெற்ற கோயில் மட்டுமல்லாமல் உலகின் பணக்கார தெய்வங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபட்டு வரும் இந்த கோவிலில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப் படுகிறது. இதில் இலவச தரிசன டிக்கெட், கட்டண தரிசன டிக்கெட், விஐபி தரிசன டிக்கெட் என பல்வேறு விதமாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கு இலவச தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள் மற்றும் கட்டண டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நேரடியாக திருமலை கவர் பக்தர்கள் பத்து நாட்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் விஐபி தரிசனம் ஸ்பெஷல் தரிசனம் அனுமதி கிடையாது என்றும் தேவஸ்தான குழு அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு பக்தர்களை மட்டுமே சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

0 கருத்துகள்