முன்பதிவில் பின்தங்கி இருந்தாலும் முதல் நாள் வசலில் மாஸ் காட்டும் ஷாருக்கானின் டங்கி.
முன்னாபாய் தொடர், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்த ராஜ்குமார் ஹிராயுடன், ஷாருக்கான் முதன் முறையாக இணைந்து நடித்து நேற்று வெளியான படம்தான் டங்கி. இதற்கு முன் வெளியான ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் அதிரடி ஆப்ஷன் உடன் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கு மேலாக வசூலித்து சாதனை படைத்தது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் டங்கி திரைப்படம் அந்த இரண்டு படங்களில் இருந்து மாறுபட்டு நிற்கிறது இது அனைத்து வித உணர்வுகளும் உள்ளடக்கிய படமாக உருவாகி வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், அனில் குரோவர், போமன் இரானி, விக்ரம் கோச்சார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.தற்போது படமும் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக தெரிகிறது. அதன்படி முதல் நாளில் உலக அளவில் 100 கோடியை கடந்து வசூலித்திருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தொடர்ந்து மூன்று படங்கள் முதல் நாளில் நூறு கோடி கடந்து சாதனை படைத்திருக்கிறது இதனால் ஷாருக்கான் என்ற ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

0 கருத்துகள்