தென் மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்த மு க ஸ்டாலின்!

 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி நாகை கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்தார் முதலமைச்சர்.


வடகிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை அதிகமாக பாதித்த நிலையில் அதன் பிறகு தென் மாவட்டத்தை சூறையாடியது. நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிப்புகளை சந்தித்தது. நான்கு நாட்கள் விடாமல் பெய்த மழையால் வீடு, நிலங்கள் உடமை என பலத்த சேதம் ஏற்பட்டது. இதற்கிடையே வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.


அதன்படி தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்க அவர் உத்தரவிட்டிருக்கிறார். அதேபோல் தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கவும் அவர் அறிவித்திருக்கிறார்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 17 ஆயிரம் ரூபாய் வழங்கவும், கடும் பாதிப்புகளுக்கு உள்ளான குடிசை வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார் இந்த உதவி தொகையால் வெள்ள பாதிப்பு துயரத்தில் இருந்து மீள உதவும் என்று பொதுமக்கள் கருதுகின்றன

ர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்