செங்கம் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு!

 புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமான செங்கம் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் அமைந்திருக்கிறது சத்தியபாமா சமேத வேணுகோபால் பார்த்தசாரதி பெருமாள் கோவில். பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 


இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று நாடெங்கும் இருக்கும் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதேபோல், செங்கம் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மங்கல இசை முழங்க கோவில் உள்பிரகாதத்தை சுற்றி வந்து சத்தியபாமா ருக்மணி சமேத பார்த்தசாரதி பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்