தமிழக மற்றும் புதுவைக்கு 30ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை!

 இந்திய கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலான இடங்களில் மழை பொழிய கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


 தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த ஒரு மாத காலமாக பொழிந்து சற்று ஓய்வெடுத்து இருக்கும் நிலையில் தற்பொழுது வங்க கடல் மாற்றம் இந்திய பெருங்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தற்போது மழை பொழிந்து வருகிறது. இந்த மேலடுக்கு கீழ் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 30 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களில் லேசான மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பொழிவும் வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. 

தென் மாவட்டங்களை பொறுத்தவரைக்கும் கடலோர மாவட்டங்களில் ஒரு இடங்களில் மழை பொழியும், உள் மாவட்டங்களில் லேசான மழை பொழியும் என்றும் தெரிவித்து இருக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்