செங்கத்தில் திரவக் கண்ணாடி கவிதை நூலை வெளியிட்ட சட்டமன்ற உறுப்பினர் முபெ கிரி!

 செங்கம் முத்தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

செங்கம் முத்தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக கவிஞர் சு தமிழ்மதியின் திரவக்கண்ணாடி ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பேராசிரியர் தமிழன் பிரபு வரவேற்புரை வழங்கினார். முத்தமிழ் இலக்கிய மன்ற தலைவர் ராம ராகவன் தலைமை தாங்கினார். பேராசிரியர் மோகன் காந்தி வாசகர் வட்ட கௌரவத் தலைவர் முருகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ கிரி கலந்துகொண்டு நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். 


அவருடைய சிறப்புரையில் செங்கத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து தமிழை வளர்க்க வருடத்திற்கு ஒரு மாபெரும் விழா எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார் இதற்கான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார். பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா நூலினை பெற்று வாழ்த்துரை வழங்கினார். பட்டிமன்ற பேச்சாளரும் முதுகலை ஆசிரியருமான பாவலர் சு வேலாயுதம் நூலினை திறனாய்வு செய்தார். பேராசிரியரும் திரைப்பட பாடகருமான செந்தில்வேலன் நாட்டுப்புற பாடல்களை பாடினார். 


நிகழ்ச்சியில் கல்வியாளர் மாணிக்கம், கவிஞர் கிருஷ்ணகுமார், முனைவர் அரங்கன் மணிமாறன், ஆசிரியர்கள் சாம்ராஜ், முருகன், சரவணன், சாந்த சீலன், சுந்தர விநாயகம்,  கவிஞர் கீதமதி, நூலகர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் கவிஞர் சு தமிழ்மதி ஏற்புரை வழங்கினார். கவிஞர் சுசில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் இளங்கோவன் நன்றியுரை யாற்றினார். தடையவியல் துறை குமரேசன், ஆசிரியர் சுரேஷ், தமிழ் ஆர்வலர்கள் தாட்சாயணி,  கொரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்