ஆயிரம் ரூபாய் இல்லாமல் பொங்கல் பரிசு அறிவிப்பு!

 இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பொங்கல் தொகுப்பு சிறப்பு பரிசினை அறிவித்து வழங்கி வருகிறது. இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தினை அரிசி சர்க்கரை ஆட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படுவது வழக்கம்.


அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு அறிவித்து அரசாணை வெளியிட்டிருக்கிறது கடந்த ஆண்டு 31-12-23 தேதியை குறிப்பிட்டு வெளியாகி இருக்கும் இந்த அரசாணையில் இந்த பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை அறிவித்துள்ளது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் அரசின் இந்த அறிவிப்பில் ஆயிரம் ரூபாய் க்காண எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை அதேபோல் இந்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்தும் அறிவிப்பு ஏதுமில்லை.


ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு தற்போது மகளிர் உரிமை தொகை மற்றும் வெள்ள பாதிப்பு நிவாரண நிதியை காரணம் காட்டி பொங்கலுக்கு 1000 ரூபாய் வழங்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் என்று தற்போது பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்