விடாமுயற்சி படத்துக்கு பிறகு பிரபல இயக்குனருடன் அஜித் நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்தான் தான் அஜித் குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல்வேறு தடைகளுக்குப் பிறகு தற்போது விடா முயற்சி திரைப்படம் அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இதற்கு இடையே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக படப்பிடிப்பு ரத்து செய்து தற்போது ஓய்வில் இருக்கிறார் அஜித். இதனிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ரசிகையுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது அது மட்டுமல்லாமல் தனது மகளான அனோஷ்காவின் பிறந்தநாளுக்கு அவர் சொகுசு கப்பலில் சென்ற போது ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு அழைத்த போது அவர்களுக்கு கை அசைத்து சென்றார்.
இதற்கிடையே தான் ஒரு தாறுமாறான செய்தி வெளியாகி அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. அதாவது பிரம்மாண்ட இயக்குனரான கேஜிஎப் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போவதாக செய்தி கசிந்து இருக்கிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாகவும் அஜித் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. அஜித் பிரசாந்த் நீல் கூட்டணி மட்டும் அமைந்தால் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூலித்த படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்