பொங்கலுக்கு 1000 ரூபாய் உறுதி.. விரைவில் அறிவிக்கும் அரசு!

 அதிகரிக்கும் எதிர்ப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய காரணத்தால் பொங்கல் தொகுப்பில் ரூபாய் ஆயிரம் இடம் பெறும்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழகஅரசு பொங்கல்  பரிசுத் தொகுப்பினை கொடுத்து வருகிறது. அதன்படி ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ பச்சரிசி முழு பொங்கல் கரும்பு கூடவே ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் அரசு வழங்கி மக்களை மகிழ்வித்து வந்தது. 

ஆனால் இந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்புகளை காரணம் காட்டி தமிழக அரசு பொங்கல் பரிசில் வெறும் சர்க்கரை அரிசி கரும்பு ஆகியவை மட்டுமே அறிவித்து அரசாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பு பொங்கலுக்கு 1000 ரூபாய் கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருந்த குடும்பத் தலைவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


வெள்ள நிவாரணத்தை காரணம் காட்டியும் மகளிர உரிமை தொகையை காரணம் காட்டியும் பொங்கல் பரிசு தொகுப்பினில் ஆயிரம் ரூபாயை நிறுத்தக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களும் கோரிக்கையோடு சேர்த்த கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் தருவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


இந்த ஆலோசனையின் தற்போது உள்ள நிதி நிலவரம் மற்றும் நிதி சுமை ஆகியவை விவாதித்து ஆயிரம் ரூபாய் வழங்கினால் எவ்வளவு சுமை அதிகரிக்கும் என்பது விவாதித்து வருவதாகவும் தெரிகிறது. கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுக்காவிட்டால் அந்த தேர்தலை இது பாதிக்கும் என்பதால் நிச்சயம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் கூடிய விரைவில் பொங்கல் சிறப்பு தொகுப்பில் 1000 ரூபாய் இடம்பெறும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பொங்கலுக்கு இன்னும் சில நாட்களில் இருக்கும் நிலையில் அதற்குள்ளாகவே பொங்கல் பரிசு தொகப்பு டோக்கனை விநியோகம் செய்து அனைவருக்கும் தொகுப்பினை வழங்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதனால் அரசு விரைந்து முடிவு எடுக்கும் என தெரிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்