தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென் தமிழகம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  வெளியிட்டு இருக்கும் இந்த அறிக்கையில் தமிழகத்தை நோக்கி வேகமாக வீசும் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேகங்கள் உருவாகி தமிழகத்தில் பரவலாக கருமேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன அதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

மேலும் சென்னை உட்பட வட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலை முதல் லேசான முதல் கனமான மழை பெய்யும் என்று சில சமயங்களில் காற்றும் வீசப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்