பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட அனைத்து சர்க்கரை அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூபாய் ஆயிரம் அறிவித்து மகிழ்ச்சி கொடுத்திருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பொங்கல் சிறப்பு தொகுப்பில் 1000 இடம்பெருமா இல்லையா என்று மக்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பொங்கல் சிறப்பு தொகுப்பில் ஆயிரம் சேர்த்து அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி பொங்கல் பரிசு தொகப்பில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ பச்சரிசி ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூபாய் ஆயிரம் ரொக்கத்தையும் வழங்க உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு பொங்கலுக்கு இலவச வேஷ்டி சேலைகளும் வழங்கப்படும் என்றும் அவைகள் அனைத்தும் ஏற்கனவே அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கூடவே பொங்கல் பண்டிகைக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்க ஏற்கனவே மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தகையினை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே அதாவது வரும் 10ஆம் தேதி அன்று வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் கிடைக்குமா கிடைக்காதா என்று குழம்பித் தவித்த மக்களுக்கு மகிழ்ச்சி அளித்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

0 கருத்துகள்