பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ள டோக்கன் விநியோக நடைமுறையை அரசு அறிவித்துள்ளது
பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழக சர்க்கரை அரிசி குடும்ப அட்டதாரர்கள் பயன்படும் வகையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டை போலவே இம்முறையும் ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்போடு சேர்த்து ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் ஒன்பதாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு சென்று பொங்கல் பரிசு தொகப்பினை பெறலாம் என்றும் 13 ஆம் தேதி பெற முடியாதவர்கள் 14ஆம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல் மகளிருக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டவரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரும் பத்தாம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு அறிவித்திருப்பதும் நம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

0 கருத்துகள்