தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு மீண்டும் காண மழை எச்சரிக்கை!

 தமிழகத்திற்கு மறுபடியும் அதிகன மழை அறிவிப்பு கொடுத்தது ஆய்வு மையம்!

வடகிழக்கு பருவமழை காரணமாக வட தமிழகம் மற்றும் தென் தமிழகமே நீரில் தத்தளித்து தற்போது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கன மழை முதல் மிக கனமழை பொழியும், அரியலூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதி மற்றும் ஓரிரு இடங்களில் கனமழையும் பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


வரும் 9 மற்றும் 10 ஆம் தேதி தென்காசி, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






கருத்துரையிடுக

0 கருத்துகள்