திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தி-மலையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த ஆட்சியர்!

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பொழிந்து வருகிறது. வரும் பதினொன்றாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் கன மழை பொழிந்து வருகிறது. காலையிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வர சிரமம் இருப்பதை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்