தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும்! ஆய்வு மையம் அறிவிப்பு.!

 வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மேலும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக கரையோரங்களில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் 9, 10, 11, 12 ஆம் தேதி வரை வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கன மழையும், குறிப்பாக வட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல் புதுவை காரைக்கால் மற்றும் தென் தமிழகங்களில் இரவு நேரங்களிலும் விட்டுவிட்டு மழை பொழியும் என்றும் ஒரு சில நேரத்தில் களம் மழை பெய்யக் கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்