நிக்ஜாம் புயல் கரையை கடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 16 17 18 தேதிகளில் கன்னியாகுமரி, இராமநாதபுரம்,நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை,நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் கன மழை பொழியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 15 ,16 ,17ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழை பொழியும் என தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை லேசான முதல் மிதமான மழை பொழியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்னெச்சரிக்கை பணிகளை எடுத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

0 கருத்துகள்