அஜித்துக்காக மாஸ் வில்லனை களம் இறக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

 அடுத்த வெற்றிக்கு தயாராகும் அஜித்தின் குட் பேட் அக்லி!


தமிழ் சினிமாவில் யாருடைய உதவியும் இன்றி தன்னுடைய கடின முயற்சியால் இன்று சூப்பர் ஸ்டாரில் ஒருவராக இருப்பவர்தான் தல அஜித். இவருக்காக எதையும் செய்யும் ஆற்றல் படைத்த ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். 

இவர் தற்பொழுது மகிழுமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தை முடித்த பிறகு மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி பாடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான முதல் கட்டப் பணிகள் துவங்கியிருக்கிறது அது மட்டுமல்லாமல் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

ஹாலிவுட் தரத்தில் அதிரடி ஆக்சன் கலந்த க்ரைம் திரில்லர் படமாக குட் பேட் அக்லி உருவாக இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இப்படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளதால் ஜான் ஆபிரகாம் வில்லன் கதா பாத்திரத்திற்கு பொருத்தமான நடிகராக இருப்பார் என்று ஆதிக்க ரவிச்சந்திரன் அஜித்திடம் சொல்லி இருப்பதாக தெரிகிறது. 

இது குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்ததும் நம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்