செப்டம்பரில் பிரம்மாண்டமாக வெளியாகும் விஜயின் கோட்!

 நீண்ட நாள் காத்திருப்பது அதிரடியாக வெளியாகும் விஜயின் கோட் 

த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய் இவர் நடிப்பில் தற்போது கோட் என்கிற திரைப்படம் உருவாகிறது, இதனை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்து வருவது.


விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மேலும் விஜய் உடன் இணைந்து பிரபுதேவா பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். ஹாலிவுட்டில் வெளியான ஜெமினி படத்தின் தழுவலாக இந்த படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் சண்டைக் காட்சிகள்

தற்போது இறுதி கட்டப்பட படப்பிடிப்பை நடத்தி வரும் படக்குழு ரஷ்யாவில் சண்டை காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தான் விஜயின் கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி உலக அளவில் பிரமாண்டமாக வெளியாகும் என புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

விஜய்க்கு வெற்றியை தரப்போகும் கோட்.

வரும் செப்டம்பர் மாதம் எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகவில்லை அதனை குறி வைத்து தளபதி விஜயின் கோட் திரைப்படத்தை களமிறக்கி உள்ளார்கள். விஜய்க்கு போட்டியாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது கோட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியிருப்பதால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை காண தற்போதே தயாராகிவிட்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்