அதிரடி முடிவெடுத்த அஜித்! திரை அரங்கை தெறிக்க விடப் போகும் குட் பேட் அக்லி!

 நீண்ட நாட்களுக்குப் பிறகு மூன்று கேட்ட பின்னடைக்கும் அஜித்!


தமிழ் சினிமாவின் ஓபனிங் கிங் என்று அழைக்கப்படுபவர் தான் அஜித், இவருடைய படங்கள் வெளியாகும் முதல் நாளில் தமிழகத்தில் யாரும் செய்யாத வசூல் சாதனைகளை படைப்பது அஜித்தின் வழக்கமாக உள்ளது. இவருக்கென்று உலகம் எங்கும் ரசிகர்கள் பட்டாலும் ஏராளம் உள்ளனர்.

இவர் தற்பொழுது மகிழ்த்திருமணி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். தற்சமயம் ஏதோ காரணங்களால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது அஜித்தும் தன்னுடைய பைக் சுற்றுலாவை ஆரம்பித்து விட்டார். அவ்வப்போது அவர் பைக்கில் செல்லும் புகைப்படங்களும் நண்பர்களோடு சமைத்து உண்ணும் வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆனது. விடாமுயற்சி படத்தின் தாமதத்தால் ரசிகர்கள் கவலையில் இருக்கும் நேரத்தில் தான் அதிரடியாக வெளியானது அவரின் 63 ஆவது படத்தின் அறிவிப்பு. 

ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் கலந்து டைம் டிராவல் படமாக இது உருவாக இருக்கிறது இப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் மூன்று காலகட்டங்களில் வரும் நாயகர்கள் ஒன்றாக சந்திக்கும்படி கதை அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. இதன் மூலம் வரலாறு படத்திற்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து மூன்று வருடங்களில் அஜித் நடிக்க இருப்பதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

இந்த செய்தி வெளியானதிலிருந்து அஜித்தின் ரசிகர்கள் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வைத்துள்ளனர். கூடிய விரைவில் புதிய தகவல் வெளியாகுமென்று நம்பப் படுகிறது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்