வெளியான தலைவர் 171 வது படத்தின் முக்கிய அறிவிப்பு.!

 ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு அடுத்த மாதம் வெளியாக என அறிவிக்கப்பட்டுள்ளது!


தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ், அவருடைய இயக்கத்தில் வெளியான கைதி, விக்ரம் மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இறுதியாக மீண்டும் விஜயை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் சில கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.

இதற்கு இடையே தான் லியோ படத்தை இருக்கும்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி இருவரும் இணையும் அந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என தலைப்பு வைத்திருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு வந்து நீண்ட நாட்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.

தற்போது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லோகேஷ் கனகராஜ் புதிய அறிவிப்பு ஒன்றை கொடுத்திருக்கிறார். அதன்படி தலைவர் 171 வது படத்தின் தலைப்பு வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் உடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அந்தப் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கூலிங் கிளாஸ் உடன் மாஸாக கெத்தா இருக்கின்றார். குறிப்பாக அவருடைய கைகளில் கை கடிகாரங்களை வைத்து விலங்கு போல் அமைக்கப்பட்டுள்ளது இது நிச்சயம் டைம் ட்ராவல் படமாகத்தான் இருக்கும் என்று யூகிக்க முடிகிறது.

அதனால் என்பதுகளின் காலகட்டத்தில் ரஜினி எப்படி இருந்தாரோ அதை கண் முன் கொண்டு வந்து நிறுத்த புதிய தொழில்நுட்பத்தில் படத்தை எடுக்க லோகேஷ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் படத்திற்கு ஏற்றார் போல் தலைப்பு எப்படி இருக்க போகிறது என்று.

கருத்துரையிடுக

0 கருத்துகள்