நீண்ட நாட்களாக இழுபறியில் கமலின் இந்தியன் இரண்டு படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தியன்2
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் தான் இயக்குனர் சங்கர், இவருடைய படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலை வாரிக் குவிக்கும். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2 இப்படம் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வருகிறது.
ஷங்கர்
இந்தியன் இரண்டு பாடம் ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆன பிறகும் பல்வேறு தடைகளைத் தாண்டி தற்போது வெளியிட தயாராக உள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரித்துள்ளது மேலும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பண உதவி செய்துள்ளது.
கமல்
இந்தியன் இரண்டு படம் வெளியாகுமா இல்லை கிடப்பில் போடப்படுமா என ரசிகர்கள் குழம்பி தவித்த வேளையில் தற்போது இப் படம் ஜூன் மாதம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால் வெளியிட்டு தேதியை அறிவிக்கவில்லை இருந்தபோதிலும் ஜூன் 13ஆம் தேதி உலகெங்கிலும் பிரம்மாண்டமாக வெளியாகும் என தெரிகிறது.
கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வசூல் வேட்டை செய்தது அதேபோல் தற்போது ஷங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகும் இந்திய இரண்டு படமும் மாபெரும் வசூல் சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்