171 இல் மாஸ் வில்லனை களம் இறக்கிய லோகேஷ்!

 தனது அடுத்த படத்திற்கு மாஸ் வில்லனை தேர்வு செய்த ரஜினி!


இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர்களில் ஒருவர்தான் ரஜினி, 70 வயதை கடந்த போதிலும் தற்போது வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து மாபெரும் வசூல் சாதனைகளை படைத்தது.

ஜெயிலர் படத்திற்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171வது படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் தற்பொழுது துவங்கியுள்ளது மேலும் சமீபத்தில் தான் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி இருந்தது. அடுத்து இந்த மாதம் 22 ஆம் தேதி படத்தின் பெயர் அறிவிப்பு குறித்தான வீடியோ வெளியாகும் என்று லோகேஷ் நாகராஜ் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தலைவர் 171 வது படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்கனவே ராகவா லாரன்ஸ் மற்றும் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்திகள் கசிந்தது. ஆனால் தற்பொழுது யாரும் எதிர் பார்க்காத வகையில் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

ராகவ லாரன்ஸ் மற்றும் ரன்வீர் சிங் இருவரில் யார் நடித்தாலும் படம் தாறுமாறாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ரன்வீர் சிங் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு குறைவு என்று சொல்லப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அடுத்த வெற்றியை உறுதி செய்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்