தமிழக பாஜக தற்போது தன்னுடைய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலும் பரபரப்பாக மாறி உள்ளது. திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள் பம்பரம் போல் சுழன்று தேர்தல் பணிகளை செய்து வருகின்றன, இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சி நேற்று தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
அதில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் அரிவிக்கப்பட்டனர். தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
இதில் நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். புதுச்சேரியில் நமச்சிவாயம் களமிறங்குகிறார்.
திருவள்ளூர் தொகுதியில் பொன்.பாலகணபதியும், சென்னை வடக்கு தொகுதியில் பால் கனகராஜும் திருவண்ணாமலையில் அஸ்வத்தாமனும் , நாமக்கல்லில் கே.பி.ராமலிங்கமும் ,. திருப்பூர் தொகுதியில் ஏ.பி.முருகானந்தமும் போட்டியிடுகின்றனர். குறிப்பாக பாஜகவின் போர்வாள் என்று அழைக்கப்படும் பேராசிரியர் ராம சீனிவாசன் மதுரை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இளவங்கோடு தொகுதி சட்டமன்ற இடை தேர்தல் நடக்கிறது அந்த தொகுதியில் நந்தினியை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
0 கருத்துகள்