விவாகரத்து செய்யும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகள்!

 திரையுலகில் நட்சத்திர ஜோடியாக இருந்த விக்னேஷ் சிவன் நயன்தாரா இடையே விரிசல் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நயன்தாரா., ரஜினி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தாலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருக்கும் முக்கிய நடிகையாக மாறியிருக்கிறார்.

இதற்கிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். அந்தப் படத்தில் பணியாற்றிய பொழுது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து லிவிங் டூ கேதர் முறையில் வாழ்ந்து வந்த இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி பிரம்மாண்டமாக திருமணத்தை செய்து கொண்டனர் இவர்களின் திருமணம் ஓ டி டி யில் திரைப்படம் போல் வெளியானதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

அதன் பிறகு வாடகத்தாய் ஒப்பந்தத்தின் மூலம் நயன்தாரா இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயாக மாறினார் அதுவும் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து தற்போது இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும் திருமணத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனின் சினிமா வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

அவர் அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குவதாக இருந்தது ஆனால் ஏதோ சில காரணத்தால் அவர் அந்த படத்தில் இருந்து அதிரடியாக நீ்கப்பட்டார் அதில் ஆரம்பித்த அவருடைய கடினமான காலம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதற்கு பலரும் நயன்தாராவை திருமணம் செய்துதான் சினிமாத்துறையில் அவருக்கு தோல்வி கிடைப்பதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்த விஷயம் தான் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவர் இடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது அது மட்டுமல்லாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது விக்னேஷ்சிவனுக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தற்போது சினிமாவையும் தாண்டி பல தொழில்களின் மூலம் கோடிகளை குவித்து வரும் நயன்தாராவுக்கு தலைகனம் அதிகமாகி விட்டதாகவும் அதனால் கணவனை மதிக்காமல் இருப்பதாகவும் இருவருக்கும் ஏற்படும் சண்டைகளின் காரணமாக விக்னேஷ் சிவனை அவர் விவாகரத்து செய்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ் சிவனின் வாழ்க்கையில் விவாகரத்து என்ற செய்தி உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்