தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக விளங்கும் பாமகவின் ராமதாஸ் அவர்கள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் பிரதான கட்சிகளாக இருக்கும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது தங்களுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களான தமிழகம் ஆந்திரா தெலுங்கானா கேரளா மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுடன் தொகுதி பங்கிட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் ஆட்சிக் கட்டிலில் அமரும் சக்தியை பெற்றுள்ளது அதனால் இங்கு திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி போன்ற பல கட்சி தலைவர்களுடன் தொகுதி பங்கீட்டில் திமுக ஈடுபட்டுள்ளது. அதே சமயம் அதிமுக பல முக்கிய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று காத்துக் கொண்டு இருந்தது ஆனால் தற்போது நிலவரப்படி விஜயகாந்தின் தேமுதிக கட்சி தான் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மற்றவை அனைத்தும் சிறிய கட்சிகளாகவே உள்ளன.
அப்படி இருக்கையில் பாரதிய ஜனதா கட்சியும் அதிமுகவை தங்கள் பக்கம் இழுக்கவும் முயற்சி செய்து வருகிறது ஆனால் தற்போது வரை அதிமுக பிடி கொடுக் காமல் நழுவிக் கொண்டே செல்கிறது. இதற்கு இடையே தான் வட தமிழகத்தில் பெரும் செல்வாக்கு உள்ள கட்சியாக இருக்கும் மருத்துவர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கு ஆதரவு தருகிறதோ அந்த கட்சி தான் வெற்றி வாகை சூடும் என்கிற நிலை எழுந்துள்ளதால் பாமகவை வளைத்து போட திமுக ஒரு பக்கமும் அதிமுக ஒரு பக்கமும் பாஜக ஒரு பக்கமும் வாசல் கதவை திறந்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர் ராமதாஸின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவர் சொல்வதையே வேதவாக்காக கொண்டு அவர் சார்ந்த வன்னிய சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பலத்தின் காரணமாக அரசியல் சாணக்கியனாக விளங்கி வரும் ராமதாஸ் மாறி மாறி கூட்டணி வைத்தாலும் அவருடைய கட்சியில் பலர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக மாறி மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
இதற்கு இடையே தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறது என்பதை பார்ப்பதற்காக ஒட்டுமொத்த இந்திய அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி பாமக அதிமுகவோடு இணைவதற்கு வாய்ப்பில்லை என்று தான் தெரிகிறது ஏனென்றால் வன்னியர்களுக்கான 10 புள்ளி 5 இட ஒதுக்கீடு கோரிக்கையை திமுக நிறைவேற்றுமையானால் அக்கட்சிக்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பிஜேபி கட்சி அவரை கூட்டணிக்கு அழைத்தால் அவரால் மறுத்து பேசவும் முடியாது என்று சூழ்நிலையும் இருக்கிறது. ஒருவேளை பாரதிய ஜனதாவில் அதிமுக இணைந்து பாமகவை அழைத்தால் நிச்சயம் பாஜக கூட்டணியில் சேர்ந்து வெற்றி வாகை சூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மருத்துவர் ராமதாஸ் முடிவு என்னவாக இருக்கும் என்று.
0 கருத்துகள்