இறுதிப் பட இயக்குனர் யார் பரபரப்பாக வெளியான தளபதி 69 அப்டேட்!
தமிழ் சினிமா உலகில் தனித் திறமையோடு உழைத்து அநேக மக்கள் விரும்பும் நடிகராக மாறியிருப்பவர் தான் தளபதி விஜய். இவருடைய படங்கள் வெளியானால் அது அவருடையடைய ரசிகர்களுக்கு திருவிழா கோலமாக மாறிவிடும்.
இதுநாள் வரை சினிமாவில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய் தற்பொழுது புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். அதன் காரணமாக படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வரும் விஜய் தன்னுடைய 69 ஆவது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட உள்ளார். இதற்கு இடையே தான் விஜயின் கடைசி படமான தளபதி 69 ஆவது படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுத்த வந்து நிலையில்., வெற்றிமாறன் லோகேஷ் கனகராஜ் நெல்சன் உள்ளிட்ட பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது.
தற்போது தளபதி 69 படத்தை பிரபல வானொலி அறிவிப்பாளரும் காமெடி நடிகருமான ஆர்ஜே பாலாஜியின் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போவதாக தகவல் பரவி இருக்கிறது அதே வேளையில் ஜிகர்தண்டா என்கிற வெற்றி படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இடமும் விஜய் கதை கேட்டுள்ளதாக தெரிகிறது.
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இருவரும் அரசியல் சார்ந்த கதையை தான் விஜய் இடம் சொல்லி இருப்பதாகவும் முழு கதையும் தயார் செய்துவிட்டு வந்து கூறுங்கள் பிறகு யார் படத்தின் நடிக்கிறேன் என்பதை அறிவிக்கிறேன் என்று இதை சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது.
இதனால் விஜயின் 69 படம் உறுதியாகிவிட்டது ஆர்.ஜே பாலாஜி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இருவரில் ஒருவர் இந்த படத்தை இயக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல பிரமாண்ட இயக்குணர்களிடம் கதை கேட்டு வந்த விஜய் ஆர் ஜே பாலாஜியிடம் கதை கேட்டு பிடித்திருப்பதாக சொல்லி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்துகள்