ஆயிரம் கோடி வசூலை உறுதி செய்த கங்குவா டீசர்!

 ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த கங்குவா படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளம் வருகிறார். இவருடைய படங்களை காண்பதற்காகவே ரசிகர்கள் பட்டாலும் ஏராளமாக உள்ளனர். உடலை வருத்தி கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிக பொருத்தமாக நடிக்கக்கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர்.

தற்போது சூர்யாவின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் கங்குவா இந்தப் படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். ஞானவேல் ராஜா பெரிய பொருட் செலவில் தயாரிக்கிறார். மேலும் கங்குவா திரைப்படம் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு மாறுபட்ட கதகத்தில் உருவாகி வருகிறது.

இதற்கிடையே தான் கங்குவா படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டீசரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு காட்சியும் வெறித்தனமாக இருக்கிறது இதனை பார்க்கும் பொழுது கங்குவா திரைப்படம் ஒரு பண்டைய கால தமிழர்களிடையே நடந்த இன குழு சண்டையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

இதில் கங்குவா எனும் போர்படை தளபதியாக சூர்யா தன்னுடைய அட்டகாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்த டீசரை வைத்து பார்க்கும் பொழுது கங்குவா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்