அஜித் ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்க சூப்பராக வெளியான ஏகே 63வது படத்தின் சூப்பர் அப்டேட்!
அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஏ கே 63 படத்தின் அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இணையதளங்களில் வைரலாக மாறிக்கொண்டிருக்கிறது.
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தான் அஜித்தின் 63வது படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
அந்த சமயத்தில் தான் அஜித்தின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி பாடத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என தகவல்கள் கிடைத்தது. அந்த செய்தியை உண்மையாக்கும் வகையில் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அஜித்தின் 63 ஆவது பாடத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதி உடன் அறிவித்திருக்கின்றார்கள். இந்த முதல் பார்வை புகைப் படத்தை வைத்து பார்க்கும் போது நிச்சயம் படம் அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று தெரிகிறது.
இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியான அஜித்தின் புதிய பட அறிவிப்பு தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
0 கருத்துகள்