யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று வெளியாகும் அஜித்தின் புதிய பட போஸ்டர்!
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்னவென்றால் அது தல அஜித்தின் விடாமுயற்சி படத்தை பற்றி தான். படம் துவங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் படம் இன்னும் வெளியாகாமல் இழுத்தடித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் நிதி பற்றாக்குறை, வெளிநாடுகளில் ஷூட்டிங் செய்தபோது ஏற்பட்ட காலமாற்றம் மற்றும் தற்போது அஜித்துக்கு உடல்நிலை சரியில்லை என்று பல்வேறு காரணங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக கூட செய்திகள் பரவி அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் விடாமுயற்சி என்ற தலைப்புக்கு ஏற்றபடி நிச்சயம் இப்படம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வெளியாகும் என்ற அப்டேட்டும் கொடுக்கப்பட்டது.
விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அனைத்துமே வெளிநாடுகளில் எடுத்து முடிக்க திட்டமிட்டு தற்பொழுது முக்கால்வாசி படம் முடிந்திருக்கிறது. இன்னும் ஓரிரு வாரத்தில் அஜித்தின் உடல் நிலை சரியான பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மார்ச் 14-ம் தேதி அன்று விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
ஏற்கனவே துணிவு வலிமை ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென்று வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காடு வைத்தது அதேபோல்தான் தற்போது விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைக் கொண்டாட தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசியாக ஈடுபட்டுள்ளனர் இன்னும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியானால் அனைத்து சமூக வலைதளங்களிலும் ஆனால் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்