தர்மபுரியில் எதிர்ப்பை மீறி மாலை அணிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

 தர்மபுரியில் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் மாதா சிலைக்கு மாலை அணிவித்த அண்ணாமலை! 


தமிழகத்தின் பாஜக கட்சி தலைவராக அண்ணாமலை வந்ததில் இருந்து  கட்சியை வலுப்படுத்தி வருகிறார். குறிப்பாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை திணறடித்து வருகிறார். அவர் பாஜக தலைவர் ஆன பிறகு தமிழகத்தில் அக்காட்சி மேலும் வலுப்பெற்றுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. 

இதற்கு இடையே தான் என் நாடு என் மக்கள் என்கிற தலைப்பில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் அண்ணாமலை. நேற்று தர்மபுரியில் சுற்றுப்பயணம் செய்த போது பொம்மிடி பள்ளி பட்டியில் இருக்கும் தூய லூர்து அன்னை ஆலயத்தில் மாதா சிலைக்கு மாலை இட வந்தார் அப்பொழுது பாஜக சிறுபான்மை விரோத போக்கு கொண்டது அதனால் நீங்கள் மாலை இடக்கூடாது என இளைஞர்கள் அவரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாத காரணத்தால் நீங்கள் என்னை மாலையிட அனுமதிக்காவிட்டால் நான் பத்தாயிரம் பேரை கூட்டி வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று அண்ணாமலை பேசினார்.  அப்பொழுது காவல் துறையினர் தலையிட்டு இளைஞர்களை இழுத்து ஓரம் அழைத்து சென்றனர் அதன் பிறகு மாதா சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து சென்றார்.

திரு அண்ணாமலை அவர்கள், மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த செய்தி அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்