விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை கைவசம் வைத்துக்கொண்டு மீண்டும் சுற்றுலாவுக்கு கிளம்பியா அஜித்!
நடிகர் அஜித் தற்போது விடா முயற்ச்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கும் அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விடாமுயற்சி படம் முழுவதுமே வெளிநாட்டில் தான் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருவதும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். விடுமுறைக்காக பட குழு சென்னை திரும்பிய நிலையில் மஜித்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார்.
அதன் பிறகு சமீபத்தில் அவருடைய அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப் போகிறார் என்று அறிவிப்பு அதிரடியாக வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் அப்டேட் வெளியானதால் மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்கள் அஜித் எப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் திடீரென அவர் படப்பிடிப்பை எல்லாம் ஒத்தி வைத்துவிட்டு மீண்டும் தன்னுடைய பைக் சுற்றுலாவை தொடங்கி இருக்கிறார். ஆப்ரேஷன் செய்துவிட்டு வீட்டில் ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் தான் அவர் மீண்டும் தன்னுடைய சாகச பயணத்தை தொடங்கி இருப்பதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா புகைப்படம் வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்பம் கலந்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
பைக் ரைட் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் சீக்கிரமாக படத்தை முடித்து வெளியிடுங்கள் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்
0 கருத்துகள்