விஜயின் புதிய கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்குமா ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவன் தான் தளபதி விஜய். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் என்ற அடிப்படையில் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தன் திறமையாலும் விடாமுயற்சியாலும் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் இவருக்கு தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
இவரின் படங்கள் வெளியாகும் நாளில் தமிழகமே திருவிழா கோலம் பூண்டிருக்கும் அப்படி இருக்கையில் சமீப காலமாக இவருடைய படங்கள் வெளியாகும் நேரத்தில் பல்வேறு அரசியல் தலையீடுகள் ஏற்பட்டு பிரச்சனைகள் சிக்கி வருகிறது. ஏனென்றால் அவருடைய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடியிருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடைய படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்று இருந்தன அதனால் அவருடைய ரசிகர்கள் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதற்கிடையே தான் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்திருக்கிறார். அதன்படி நேற்றைய தினத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகமாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கட்சியாக மாற்றி அதன் தலைவராக விஜய் பொறுப்பேற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜயின் அரசியல் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் அதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ஏற்கனவே திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், நாம் தமிழர், பிஜேபி என பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அவை அனைத்தையும் தாண்டி விஜயன் தமிழக வெற்றி கழகத்தால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஒருவேளை இந்த கட்சிகள் எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு தமிழக மக்கள் விஜயின் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவளித்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று விஜயன் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் விஜயின் அரசியல் வருகை எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று.
0 கருத்துகள்